/

பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு: மாவட்டவாரியாக விவரம்

சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 3,970 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 அக்டோபர் 2020, 12:58 pm


சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 3,970 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், குணமடைந்தோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பொன்றை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,242 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,272 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 392 பேருக்கும், சேலத்தில் 339 பேருக்கும், செங்கல்பட்டில் 309 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.