திருப்புவனம் ஒன்றியத்தில் திமுகவினருக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மேலராங்கியத்தில் திமுகவில் புதிதாக இணைய வழியில் இணைந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் மேலராங்கியத்தில் திமுகவில் புதிதாக இணைய வழியில் இணைந்த நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இவ் விழாவுக்கு திமுக ஒன்றியச் செயலாளர் வசந்தி சேங்கைமாறன் தலைமை தாங்கினார், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் விழாவில் கலந்து கொண்டு புதிய திமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ் விழாவில் திமுக மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் அண்ணாமலை, ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி, மடப்புரம் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...