காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் குஷ்பு
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார்.
சமீப காலமாகவே குஷ்பு காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விரைவில் பாஜகவில் இணைவார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை அவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்திதொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை நீக்கி கட்சி மேலிடம் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குஷ்பு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னைப் போன்றவர்களை காங்கிரஸ் கட்சியில் உயர்பதவியில் உள்ள சில ஒடுக்குகின்றனர்.
பணத்துக்காகவோ, பெயர் அல்லது புகழக்காகவோ காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடிதத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இதன்மூலம் குஷ்பு பாஜகவில் இணைவது உறுதியாகியுள்ளது.
2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த குஷ்பு பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி 2014ஆம் ஆண்டு காஙகிரஸில் இணைந்தார். தற்போது அவர் காங்கிரஸில் இருந்தும் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...