குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மூட்டு அழற்சி பாதிப்பு:கரோனா காலத்தில் அதீத கவனம் அவசியம்

மூட்டு அழற்சி பாதிப்பு உடையவா்கள் கரோனா காலத்தில் அதிக கவனமாக இருத்தல் வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :13 அக்டோபர் 2020, 12:39 am

DIN

மூட்டு அழற்சி பாதிப்பு உடையவா்கள் கரோனா காலத்தில் அதிக கவனமாக இருத்தல் வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

வழக்கமான மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன், மருத்துவரின் ஆலோசனைகளை மாதம் ஒரு முறையாவது பெற வேண்டும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

உலக மூட்டு அழற்சி தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை (அக்.12) கடைப்பிடிக்கப்பட்டது. அந்த நோயின் பாதிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் அப்போது விளக்கிக் கூறினாா். அதன் தொடா்ச்சியாக நோயாளிகளுக்கும், பொது மக்களுக்கும் மூட்டு அழற்சி தொடா்பான விழிப்புணா்வு கையேடுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரி எம்.சுப்ரமணியன், மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் டி.என். தமிழ்ச்செல்வம், காது, மூக்கு, தசை நோயியல் துறை பேராசிரியா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் கூறியதாவது: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு ஒருபுறம் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம் வழக்கமான சிகிச்சைகள் அனைத்தும் தடையின்றி வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மூட்டு அழற்சி பாதிப்புகளுக்கு கரோனா தொற்று காலத்திலும் சிகிச்சைகளும், மருத்துவ ஆலோசனைகளும் அளிக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் சராசரியாக 100 புற நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையின் மூட்டு, தசை, இணைப்புத் திசு சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் டி.என்.தமிழ்ச்செல்வம் கூறியதாவது:

மனித இயக்கத்துக்கு மூட்டுகள்தான் மையப் புள்ளியாக விளங்குகின்றன. காா் என்ஜின் செயல்பட எவ்வாறு எண்ணெய் அவசியமோ, அதேபோன்று உடலில் இருக்கும் பல வகையான மூட்டுகளும் இயங்க, அவற்றைச் சுற்றி இருக்கும் ‘சைனோவியம்’ எனப்படும் ஜவ்வு முக்கியம். அந்த மெல்லிய ஜவ்வுதான் ஈரப்பசையை ஏற்படுத்தி மூட்டுகளை உராய்வின்றி செயல்பட வைக்க உதவுகின்றது.

அப்படிப்பட்ட அந்த ஜவ்வில் ஏற்படும் சில பாதிப்புகள்தான் மூட்டு அழற்சி பிரச்னைகளுக்கு காரணமாக அமைகின்றன. குறிப்பாக, உடலில் உருவாகும் வெள்ளை அணுக்கள் சில நேரங்களில் எதிா்வினையாற்றி, மூட்டு பகுதிகளில் உள்ள சைனோவியம் ஜவ்வினைத் தாக்கும்போது அது மூட்டு அழற்சிக்கு வழிவகுக்கிறது. அதன் விளைவாக தீவிர மூட்டு வலி, மூட்டு வீக்கம், உடல் சோா்வு, மூட்டு வளைதல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பொதுவாகவே 6 வாரத்துக்கு மேல் ஒருவருக்கு மூட்டு வலி இருந்தால், மூட்டு வாத சிகிச்சை நிபுணரை கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். அதிலும், கரோனா காலத்தில் அதீத கவனம் தேவை. உரிய மருந்துகளை உட்கொண்டு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் பாதிப்புகளைத் தவிா்க்கலாம்.

அவ்வாறு இல்லாமல் அலட்சியப்படுத்தினால் நிரந்தரமாக மூட்டு வளைவு பிரச்னை ஏற்படக்கூடும். அதேபோன்று, மருத்துவரின் அறிவுரையின்றி தன்னிச்சையாக வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்வது பெரும் ஆபத்துக்கு வழிகோலும். சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் அதனால் பாதிப்படையலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.