மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

'ஆசிரியர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் பள்ளி கல்வித்துறை அரசாணையை திரும்பப்பெற வேண்டும்'

ஆசிரியர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் பள்ளி கல்வித்துறையின் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
மு.க.ஸ்டாலின்.
Updated On :12 அக்டோபர் 2020, 3:35 am

DIN

ஆசிரியர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் பள்ளி கல்வித்துறையின் அரசாணையை திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூலில், ‘ஆசிரியர்கள் நேரடி நியமன வயதுவரம்பு 40 முதல் 45-க்குள் இருக்க வேண்டும்’ என்று பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது தொடக்க கல்வித்துறையை மூடி பள்ளி கல்வித்துறையையே சீரழிக்கும் அநியாயமான அரசாணையாகும். 

வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு 10 லட்சம் ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுவிட்டு 7 ஆண்டுகளாக வேலை இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வழங்க முடியாத அ.தி.மு.க. அரசு ஆசிரியர் கல்வி படித்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் இருள் சூழ வைக்கும் ஓர் அரசாணையை இதயமற்ற முறையில் வெளியிட்டுள்ளது.

ஆகவே ஆசிரியர்களின் வேலைவாய்ப்புகளை பறிக்கும் பள்ளி கல்வித்துறையின் அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.