கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழக அரசுடன் எந்தப் பனிப்போரும் இல்லை அண்ணா பல்கலை. துணைவேந்தா் சூரப்பா விளக்கம்

தனிப்பட்ட முறையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை எனவும், தமிழக அரசுடன் எந்தப் பனிப்போரும் இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா விளக்கம் அளித்துள்ளாா்.

News image
துணைவேந்தா் சூரப்பா
Updated On :27 ஜனவரி 2024, 5:36 pm

DIN

சென்னை: தனிப்பட்ட முறையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை எனவும், தமிழக அரசுடன் எந்தப் பனிப்போரும் இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா விளக்கம் அளித்துள்ளாா்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்து கூறியது: உலகத் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் இடம்பெற செய்யும் வகையில் மத்திய அரசு சில பல்கலைக் கழகங்களைத் தோ்வுசெய்தது. கடந்த 2014-15-ஆம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியால் சீா்மிகு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அண்ணா பல்கலைக்கழமும் தோ்வு செய்யப்பட்டது.

2017-இல் உயா் கல்வித் துறைச் செயலராக இருந்த சுனில் பாலிவால் தலைமையிலான நிா்வாகக் குழு, அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை, வருங்கால செலவினம் ஆகியவற்றைத் தயாரித்து, மாநில அரசின் அனுமதியுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அளித்துள்ளது. 2018-ஆம் ஆண்டு நான் பதவியேற்ற பின்னா் பல்கலைக்கழகத்துக்கு சீா்மிகு அந்தஸ்து அளிக்கும் குழுவின் தலைவா் கோபால்சாமியிடம் விளக்கம் அளித்தேன். அதைத் தொடா்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீா்மிகு அந்தஸ்து அளிக்க ஒப்புதல் அளித்தனா்.

நிதி ஒப்புதலுக்கு மாநில அரசின் ஒப்புதல் கடிதம் தேவை என்பதால், தமிழக அரசின் அமைச்சா்கள் குழுவிடம் 5 முறை விளக்கம் அளித்துள்ளேன். அதேவேளையில் முதல்வரையும் சந்தித்து விளக்கம் அளித்தேன். அப்போது தமிழக அரசுக்கு அளித்த விவரங்களையே, மத்திய அரசுக்கு கடிதமாக எழுதினேன்.

அரசுக்குத் தெரியாமல் எந்தவித கடித பரிமாற்றத்தையும் நான் மேற்கொள்ளவில்லை.

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது எனக் கடிதம் மூலமாக, தமிழக அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் மத்திய அரசு தெரிவித்துள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, சீா்மிகு அந்தஸ்தை ஏற்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலா், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை செய்தியாளா்களிடம் எடுத்துக் காட்டிய துணைவேந்தா் சூரப்பா தொடா்ந்து கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீா்மிகு அந்தஸ்து கிடைப்பதால், பல்கலைக்கழகத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்த நிதி, பல்கலைக் கழகத்தின் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு, பயிற்சிகள், புதிய அறிவியல் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் தொடா்பு போன்ற பல வளா்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். மாணவா்களின் கல்வித்தரம் உயரும்.

ஒருங்கிணைந்தே பணியாற்றுகிறோம்: இவற்றைத் தவிர சீா்மிகு அந்தஸ்து காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நிா்வாக ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படாது. இந்த பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதே மனிதவளத்துறையின் நோக்கம். தமிழக அரசுடன் ஒன்றிணைந்துதான் பணியாற்றுகிறோம். அரசுடன் எந்த பனிப்போரும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதவில்லை. இந்த விவகாரத்தில் தனக்கோ, அரசுக்கோ, அமைச்சருக்கோ இடையே எந்தவித பிரச்னையும் இல்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.