சென்னையில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிச. 31 வரை காலக்கெடு
சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க 31.12.2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


சென்னை: சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க 31.12.2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி, வருவாய் துறையின் மூலம் நிறுவனங்களின் தொழில் உரிமம் 2020-2021ம் நிதியாண்டில், 31.03.2020க்குள் புதுப்பிக்க வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தொழில் உரிமத்தை எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் புதுப்பிக்க ஏதுவாக 31.12.2020 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, நிறுவனங்கள் தங்களின் தொழில் உரிமத்தை 31.12.2020 வரை எவ்வித தண்டத்தொகையுமின்றி புதுப்பிக்கலாம் என ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...