ஹிந்தி மொழியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சின்ன திரை தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்தி தொடர்கள் நேரடியாக தமிழில் ஒளிபரப்பான நிலையில், தற்போது மீண்டும் ஹிந்தி தொடர்கள் தமிழுக்கு வருகின்றன.
இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் சின்ன திரை தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிய களங்களில் தொடர்களை எடுக்கவும் அதை ஊக்குவிக்கும் நடவடிக்கையிலும் தொலைக்காட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இதனால், சமீபகாலங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கும் அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. சினிமா நட்சத்திரங்களுக்கு இணையாக சின்ன திரை தொடர்களும் மக்களால் கொண்டாடப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி தமிழ்த் தொலைக்காட்சியிலேயே பிறமொழித் தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வந்தது. சமீப காலங்களாக தமிழிலேயே ஹிந்தி தொடர்களுக்கு இணையான பிரமாண்ட தயாரிப்புகளுடன் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
காதல் ஒரு வானவில்
இந்நிலையில் மீண்டும் தமிழில் ஹிந்தி மொழித் தொடர்கள் நேரடியாக மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளது. அந்தவகையில், ஹிந்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற குச் ராங் பியார் கி அசே பாய் (Kuch Rang Pyar Ke Aise Bhi) பெய்ஹாத் (Beyhadh) ஆகிய இரு தொடர்கள் காதல் ஒரு வானவில், எல்லை இனி இல்லை ஆகிய பெயர்களில் தமிழில் ஒளிபரப்பாகவுள்ளன.
எல்லை இனி இல்லை
புதிதாக தொடங்கப்பட்டுள்ள சோனி விழா தொலைக்காட்சியில் இந்த இரு தொடர்களும் ஒளிபரப்பாகவுள்ளன. ஜூன் முதல் இவை ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Hindi serials to be aired in Tamil again
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்மிக பயணத்தில் நடிகை சைத்ரா ரெட்டி!

இளம் வயதில் புது வீடு கட்டி குடியேறிய சின்ன திரை நடிகை!

முடிவுக்கு வரும் 3 மதிய நேர தொடர்கள்!

யாருக்கு வாக்களித்தனர்? சூசகமாக தெரிவித்த சின்ன திரை ஜோடி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி





