47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாமக்கலில் அதிமுக ஆண்டு விழா

அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள எம்ஜிஆர் உருவச்சிலைக்கு நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

News image
சேந்தமங்கலத்தில் அதிமுகவினருக்கு இனிப்புகளை வழங்கும் சட்டப்பேரவை உறுப்பினர் சி. சந்திரசேகரன்.
Updated On :17 அக்டோபர் 2020, 8:40 am

DIN

நாமக்கல்: அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள எம்ஜிஆர் உருவச்சிலைக்கு நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் நாமக்கல்-சேலம் சாலையின் இருபுறத்திலும் கழிவு நீரோடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 

இதேபோல் சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி. சந்திரசேகரன், சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து அதிமுகவின் 49-ஆவது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டமாக கட்சியினர்,  பொதுமக்களுக்கு அவர் இனிப்புகளை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.