மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அதிமுக அரசில் ஊழல் என ஸ்டாலின் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது: செல்லூர் ராஜு

அதிமுக அரசில் ஊழல் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

News image
அமைச்சர் செல்லூர் ராஜு
Updated On :18 அக்டோபர் 2020, 10:02 am

DIN

அதிமுக அரசில் ஊழல் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

மதுரையில் அதிமுகவின் 49- ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு,

நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு போட்டி திமுக மட்டுமே. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேறு எதிரிகளே இல்லை. 

அதிமுக அரசில் ஊழல் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. நாங்கள் சொந்தக்காலில் நிற்க விரும்புகிறோம். பிறர் காலை நம்பி நிற்கவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுகவின் பொன்முடி மகன் மட்டுமில்லாமல் பலர் சிக்கியுள்ளனர். கொள்ளையடிப்பதில் தனிக்கலை கொண்ட திமுகவினர் விஞ்ஞான ரீதியாக கொள்ளையடித்துள்ளனர்.

தமிழகத்தில் இருண்ட ஆட்சி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை அதிமுக அரசு தான் வழங்குகிறது. ஸ்டாலின் வீட்டிற்கு 100 யூனிட் இலவச மின்சாரத்தை அதிமுக அரசு தான் வழங்குகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.