சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 2,237 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
மாநிலத்தில் புதிதாக 3,094 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 263 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..