2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மருத்துவப் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு: ஆளுநரை சந்தித்து அமைச்சர்கள் வலியுறுத்தல்

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி அமைச்சர்கள் இன்று ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். 

News image
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
Updated On :20 அக்டோபர் 2020, 7:02 am

DIN

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கக்கோரி அமைச்சர்கள் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். 

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கிலும், 'ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்வரை தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது' என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து அமைச்சர்கள் இன்று வலியுறுத்தியுள்ளனர். 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்‌, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார்‌, சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்‌, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்‌ ஆகியோர் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.