கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்தது!

சென்னையில் செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 312 குறைந்து ரூ. 37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
கோப்புப்படம்
Updated On :20 அக்டோபர் 2020, 5:34 am

DIN

சென்னையில் செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 312 குறைந்து ரூ. 37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்து, தற்போது ஏற்ற, இறக்க நிலையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,464 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ. 312 குறைந்து ரூ. 37,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 39 குறைந்து ரூ. 4,670-க்கு விற்பனை ஆகிறது. 

அதேபோன்று நேற்றைய விலையை ஒப்பிடுகையில் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து இன்று ரூ. 66.10 -க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.66,100-க்கும் விற்பனை ஆகிறது.

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (விலை ரூபாயில்)

1 கிராம் தங்கம்.......................... 4,670

1 சவரன் தங்கம்...............................37,360

1 கிராம் வெள்ளி.............................66.10

1 கிலோ வெள்ளி.............................66,100

திங்கள்கிழமை விலை நிலவரம் (விலை ரூபாயில்)

1 கிராம் தங்கம்............................. 4,709

1 சவரன் தங்கம்............................... 37,672

1 கிராம் வெள்ளி............................. 66.70

1 கிலோ வெள்ளி............................. 66,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.