இதனையடுத்து சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட எடப்பாடி செல்லும் சாலையில் உள்ள லட்சுமி தீர்த்தம் அருகே அரசு அனுமதியுடன் பேரூராரட்சியின் சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து முருக சந்திரா எஜூகேசனல் மற்றும் சோசியல் பவுண்டேசன் டிரஸ்ட் தலைமையில், எடப்பாடி ஸ்வலெக்ட் எனர்ஜி சிஸ்டம்ஸ் தலைவர் ஆர்.செல்லப்பன், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பொது நல அமைப்புகளும் இணைந்து பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சுமார் முக்கால் ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தி சடலங்களை எரியூட்டுவது, ஈமக்காரியங்கள் செய்வதற்கு தனி இடம், குளியல், கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், சடலங்களை எடுத்து வருவதற்கு ஆம்புலன்ஸ் வாகன வசதி, தகன மயானத்தில் கண்காணிப்பு கேமரா, ஜெனரட்டர் வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைச் செய்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளனர்.