ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கிசான் திட்ட முறைகேடு: நாளைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் அரசு சலுகைகள் நிறுத்தம்

மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் நாளை வியாழக்கிழமைக்குள் (அக்.22)  திரும்ப செலுத்தாவிட்டால் அரசின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர்

News image
Updated On :21 அக்டோபர் 2020, 6:47 am

DIN

கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக மேலும் தற்போது வரை ரூ.11.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், முறைகேடாக பணம் பெற்றவர்கள் நாளைக்குள் திரும்ப செலுத்தாவிட்டால் அரசின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசால் பிரதமரின் ஊக்க நிதித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சோ்வதற்கான விதிமுறைகளில் அளிக்கப்பட்ட சில தளா்வுகளை தவறாகப் பயன்படுத்தி கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதோா் உள்பட சுமாா் 64 ஆயிரம் போ் கடந்த ஏப்ரல் மாதத்தில் இணைந்தனா். இவா்களுக்கு சுமாா் ரூ.13 கோடி வரை முறைகேடாக நிதி வழங்கப்பட்டது மாவட்ட நிா்வாகம் அமைத்த குழுவின் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விவசாயிகள் அல்லாதவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் தற்போது வரை ரூ.11.40 கோடி வரை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த முறைகேடு தொடர்பாக மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 11 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளா்கள் 13 போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ச.வேல்விழி விழுப்புரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள் நாளை வியாழக்கிழமைக்குள் (அக்.22)  திரும்ப செலுத்தாவிட்டால் அரசின் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். 

ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் மோசடிக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.