மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 26 முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 26-ம் தேதி முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News image

சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 26 முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

Updated On :21 அக்டோபர் 2020, 10:41 am

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 26-ம் தேதி முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் ஆயக்கட்டு பாசனத்திற்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும், தண்ணீர் திறந்து விடக் கோரி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடிமக்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்தில் இருந்து முதல் போக சாகுபடி 1,825 ஏக்கர் பழைய நன்செய் நிலங்களுக்கும், 1,040 ஏக்கர் புதிய புன்செய் நிலங்களுக்கும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் சேர்த்து 26.10.2020 முதல் 15.3.2021 வரை, முதல் 51 நாள்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதமும், அடுத்த 31 நாட்களுக்கு விநாடிக்கு 27 கன அடி வீதமும், கடைசி 59 நாட்களுக்கு விநாடிக்கு 25 கன அடி வீதமும், மொத்தம் 331.95 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.. மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.