இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பாலசிங்கம் இறந்துவிட்டார் என்பதற்காக இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. உயிருடன் இருக்கும் பிற சாட்சிகள் மூலமாக வழக்கை நிரூபிக்க முடியும் என தெரிவித்தார். மேலும், நீண்ட காலதாமதம், ஆவணங்கள் காணமல் போனது ஆகியவை வழக்கை ரத்து செய்வதற்கு உரிய காரணமாக கூற முடியாது. எனவே, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் நடைமுறையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என குற்றவியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். ஆவணங்களை பெற்ற அமர்வு நீதிமன்றம் சட்டப்படி விசாரணை நடைமுறைகளை தொடங்க உத்தரவிட்டு, வழக்கை ரத்து செய்ய கோரிய வி.கே.டி. பாலனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.