ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசு அலுவலகங்களுக்கு மீண்டும் வாரத்தில் 5 வேலை நாள்கள்: ஜன. 1 முதல் அமல்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

News image
அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாள்கள் மட்டும் இயங்கும்: அரசாணை வெளியீடு
Updated On :24 அக்டோபர் 2020, 12:53 pm

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

கரோனா காலத்தில் நீண்ட காலமாக மூடிக் கிடந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும்  சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாள்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இயங்கிவந்தன.

தற்போது மாற்றப்பட்டு, மீண்டும் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கிவந்த அரசு அலுவலகங்கள் ஜனவரி 1 முதல் 100 சதவீத ஊழியர்களுடன் முழு அளவில் இயங்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணை..

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.