குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 2,708-ஆகக் குறைந்தது

தமிழகத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக 3 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :26 அக்டோபர் 2020, 8:19 pm

DIN

தமிழகத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக 3 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை மாநிலம் முழுவதும் 2,708 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தில் இதுவரை 95.89 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 11,713 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 747 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 253 பேருக்கும், சேலத்தில் 165 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே கரோனா தொற்றிலிருந்து மேலும் 4,014 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 93 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 71,489-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 29,268 போ் சிகிச்சையில் உள்ளனா். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அந்த எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

32 போ் பலி: இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 32 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 18 போ் அரசு மருத்துவமனைகளிலும், 14 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,956-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.