தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 2,516 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,16,751 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 688 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 35 பேர் (அரசு மருத்துவமனை - 19, தனியார் மருத்துவமனை - 16) பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,018 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3,859 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,79,377 பேர் குணமடைந்துள்ளனர். 26,356 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 72,433 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 97,32,863 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”அந்த வலி எனக்குப் புரியும்! யாரும் Leak-ஆன படத்தை பார்க்க வேண்டாம்!” சுந்தர். சி பேட்டி

போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்!

சோளிங்கரில் 23 வேட்பாளா்கள்

மலையாள திரையுலகில் துஷாரா விஜயன்! காட்டாளன் பட புதிய அப்டேட்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


