ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ரூ.118 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள கட்டடத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியில் ரூ.118 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட உள்ள ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி கட்டடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் உள்ளிட்ட பெருந்திட்ட வளாகங்கள் ரூ.118.40 கோடி திட்ட மதிப்பீட்டில் 5 தளங்கள் கொண்ட ஒருங்கிணைந்த வளாகங்கள் கட்டப்பட உள்ளன.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்ஷினி, மாவட்ட வருவாய் ஆய்வாளர் ம. ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் க.இளம்பகவத், மாநிலங்களைவை உறுப்பினர் அ.முகமதுஜான், எம்எல்ஏக்கள் சு.ரவி, ஜி.சம்பத் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com