குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மெட்ரோ ரயில் டிக்கெட், பயண அட்டைக்கான வழிமுறைகள் வெளியீடு

செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பயண அட்டையைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

News image
சென்னை மெட்ரோ
Updated On :5 செப்டம்பர் 2020, 11:05 am

DIN

சென்னை: செப்டம்பர் 7-ம் தேதி முதல் இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு பயண அட்டையைப் பயன்படுத்துவதறக்ன வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பயண திறன் அட்டைகளை பாதுகாப்பான முறையில் புதுப்பிக்கவும், புதிதாக பெறவும் டிக்கெட் கௌண்டர்கள் செயல்படும்.

மின்னணு அலைவரிசையில், பயணிகள் எதையும் தொடாமல் பயண அட்டையை பயன்படுத்தும் க்யூ ஆர் கோட் வசதிகளும் உள்ளன.

பயண அட்டைகளை புதுப்பிக்க, காலம் நீட்டிக்க ஆளில்லா பயண அட்டை சான்றளிக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பணப் பரிவர்த்தனையற்ற திறன் அட்டை புதுப்பிக்கும் வசதி எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருவழிப் பயண டிக்கெட் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தவிர்க்க முடியாத நிலையில் தேவையின் அடிப்படையில் வில்லைகள் வழங்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு அதி நவீன தானியங்கி பயணச் சீட்டு சான்றளிக்கும் இயந்திரங்களை அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் முன்பு நிறுவி உள்ளது.

பயன்படுத்தப்படாத நிலுவைத் தொகையுள்ள திறன் அட்டைகளின் கால அளவை 2020 அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

பயணிகள் இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் பயணச்சீட்டு வழங்கும் கருவிகளுக்கு பதிலாக பயண அட்டை சான்றளிக்கும் கருவிகள் வாயிலாக புதுப்பித்துக் கொள்ளலாம்.

பயணிகள் க்யூ ஆர் கோட் வடிவில் ஒருவழிப் பயண அட்டை, இருவழிப் பயண அட்டை, பலவழி பயன்பாடு அட்டையை பெறலாம்.

இந்த க்யூ ஆர் குறியீட்டை தொடுதல் இல்லாமல் குறிப்பிட்ட நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வாயில்களில் நவீன ஊடுகதிர் கருவுகள் பொருத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.