திண்டுக்கல் சீனிவாசனின் சகோதரர் மறைவு: முதல்வர் இரங்கல்
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சகோதரர் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சகோதரர் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சகோதரர் நாராயணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 6.9.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
நாராயணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஈடுசெய்ய முடியாத துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை அமைச்சருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் அளிக்கவும், நாராயணனின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...