தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, பெரிய மருத்துவமனைகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத பகுதிகள், பெரிய கிராமங்கள் என சுமார் 2 ஆயிரம் பகுதிகளில் சிறு மருத்துவமனைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் இருப்பார்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முழு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் 40% மக்கள் முகக்கவசம் அணிவதில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஞாயிறன்று இறைச்சி கடைகளில் அதிக மக்கள் கூடுகிறார்கள். சென்னை மெரினா கடற்கரையிலும் அதிக மக்கள் கூடுகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் அவசியமின்றி மக்கள் வெளியே செல்லக் கூடாது என்றும் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.