சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரியர் தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு: ஏஐசிடிஇ எழுதியதாகக் கூறப்படும் கடிதம் வெளியானது எப்படி?

மாணவர்களின் அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என்று கூறி ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

News image
அரியர் ரத்துக்கு எதிப்பு: ஏஐசிடிஇ எழுதியதாகக் கூறப்படும் கடிதம் வெளியானது எப்படி?
Updated On :27 ஜனவரி 2024, 5:17 pm

DIN

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களின் அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என்று கூறி ஏஐசிடிஇ அனுப்பிய கடிதம் வெளியானதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, ஏஐசிடிஇ அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் வெளியானதாகவும், அதில், பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என்றும், தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் உயர்கல்வியில் சேர தகுதி பெற முடியாது என்றும் கூறப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்தக் கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அதுபோன்ற எந்த கடிதத்தையும் தான் தமிழக அரசுக்கு அனுப்பவில்லை என்றும், ஏஐசிடிஇ-யின் கடிதத்தை நான் ஊடகங்களுக்கு வழங்கவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், ஏஐசிடிஇ அனுப்பியதாக வெளியான கடிதம் உண்மையானதா என்ற கேள்விக்கு அதனை உறுதிப்படுத்தும் வேலை எனக்கு இல்லை, ஏஐசிடிஇ-யை தொடர்பு கொண்டு அந்த கடிதம் உண்மையானதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுமாறு பதில் அளித்துள்ளார்.

தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் எழுத வேண்டிய அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், அதனை ஏஐசிடிஇ ஏற்க மறுத்து இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் அது தொடர்பான எந்த மின்னஞ்சலும் தங்களுக்கு வரவில்லை என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.