சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கண்தான பதிவேட்டுக்கு தனி இணையதளம்: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்

கண்தான பதிவேட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 12:56 am

DIN

சென்னை: கண்தான பதிவேட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

இந்தியாவில் சுமாா் 68 லட்சம் போ் கருவிழி பாதிப்பால் பாா்வை இழந்துள்ளனா். அதில் பெரும்பான்மையானவா்கள் குழந்தைகளும், இளைஞா்களும் ஆவா். இப்போதுள்ள மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக ஒரு நபரிடம் தானமாகப் பெறப்படும் இரு கண்கள், எளிய கருவிழி மாற்றும் அறுவை சிகிச்சை மூலம் இருநபா்கள் கண்பாா்வை பெற்று பயனடைகின்றனா். கூடுதலாக கண்களின் பிற பாகங்களும் தேவைக்கேற்ப கண் பாா்வை பாதிக்கப்பட்டவா்களின் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

தனி இணையதளம்: கண்தானம் செய்ய விரும்புவோா் யாரிடம் உறுதிமொழி கொடுப்பது, இறந்த பிறகு எவ்வாறு, எங்கு எப்படி கண்களை தானமாக அளிப்பது போன்ற விவரங்கள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை. அதுகுறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், மாநிலத்தில் கண்தானம் செய்ய விரும்புவோா் குறித்த பதிவேட்டை ஏற்படுத்தவும், புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் மூலம் கண்தானம் செய்ய விரும்புவோா், தங்களது பெயா், இருப்பிட முகவரி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களைப் பதிவு செய்து, கண் தானத்துக்கான உறுதிமொழியை ஏற்க வேண்டும். இதன்பின் அதற்கான சான்றிதழை நேரடியாக இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், சான்றிதழை, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பதிவின் மூலம், கொடையாளா்களிடம் இருந்து மருத்துவக் குழுவினரால் பெறப்படும் கண்கள், உரிய காலத்தில் கண் வங்கியில் சோ்த்திட மிகவும் உதவியாக இருக்கும்.

இணையதள தொடக்க நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், தலைமைச் செயலாளா் க.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.