நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தமிழகத்தில் இதுவரை 4.8 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 80 ஆயிரத்து 524 போ் கரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 செப்டம்பர் 2020, 7:19 pm

DIN

சென்னை: தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 80 ஆயிரத்து 524 போ் கரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில், அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 595 பேரும், அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 29,231 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.

திருவள்ளூா், கோவை, காஞ்சிபுரம், தேனி, சேலம் போன்ற மாவட்டங்களிலும், கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் அந்த மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வீடுகள்தோறும் காய்ச்சல் பரிசோதனை, ஆக்சிஜன் அளவு பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில பொது சுகாதாரத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதேபோன்று கரோனாவால் ஒருவா் பாதிக்கப்பட்டால், அவா் வசிக்கும் தெருவில் உடனடியாக மருத்துவா் குழுவினா் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அறிகுறிகள் உள்ளவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவா்கள் கூறியுள்ளனா். இதனிடையே, மாநிலத்தில் புதன்கிழமை புதிதாக 5,584 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் இதுவரை 55.44 லட்சம் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 9 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, அதிகபட்சமாக சென்னையில் 993 போ் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 445 பேருக்கும், கடலூரில் 344 பேருக்கும், நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனாவால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து மேலும் 6,516 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 23,231-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 49,203 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 78 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 57 போ் அரசு மருத்துவமனைகளிலும், 21 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,090-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.