ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுரைக்கு பைப் லைன் மூலம் குடிநீர்: கூடலூர் விவசாயிகள் எதிர்ப்பு

தேனி மாவட்டம் லோயர் கேம்பிலிருந்து தனியாக பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு கூடலூர் விவசாயிகள் சங்கத்தினர்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News image

குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு கூடலூர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஒட்டிய போஸ்டர்

Updated On :9 செப்டம்பர் 2020, 8:47 am

DIN

தேனி மாவட்டம் லோயர் கேம்பிலிருந்து தனியாக பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு கூடலூர் விவசாயிகள் சங்கத்தினர்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து வெளியேறும் முல்லைப் பெரியாற்றில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் குடிநீர் தேவைக்காக  உறை கிணறு அமைத்து  எடுக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் மதுரை மாநகருக்கு வைகை அணையிலிருந்து குடிதண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய திட்டம் தயாரித்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தனியாக இரும்புக் குழாய் அமைத்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு கூடலூர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.  இதுதொடர்பாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.  

இதுபற்றி நிர்வாகி செங்குட்டுவன் கூறுகையில், மதுரை மாநகர மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்வதை தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல, நேரடியாக லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு இரும்புக் குழாய் மூலம் கொண்டு செல்லக்கூடாது.

தற்போது மதுரைக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது, வைகை அணையை தூர்வாரினால் மதுரைக்கு அங்கிருந்து கூடுதலாக தண்ணீர் கொண்டு செல்லலாம். இந்தத் திட்டத்தை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும், அதைவிடுத்து லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடி தண்ணீர் கொண்டு சென்றால் விவசாயிகள் சங்கம் போராடும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.