அதேபோல், தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி அவர்களும் ஆ.ராசா அவர்களும் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஐந்து முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர் பொன்முடி. ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆ.ராசா. பொன்முடி, மூன்று முறை மாநில அமைச்சராக இருந்தவர். ஆ.ராசா, இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்தவர். பொன்முடியாக இருந்தாலும், ஆ.ராசாவாக இருந்தாலும், தங்களது அறிவை, உழைப்பை, திறமையை, ஆற்றலை, முழுமையாக திமுக வளர்ச்சிக்கு எழுச்சிக்கு மேம்பாட்டுக்கு பயன்படுத்திப் பாடுபடுங்கள் என்று அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.