பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள கிருமி நாசினியை பயன்படுத்திய பின்னரே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கடந்த 01.09.2020 அன்று பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டு, அன்றைய தினம் ஏறத்தாழ 6 இலட்சம் பயணிகள் பயணம் செய்தனர். பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு, நாளொன்றுக்கு ஏறத்தாழ 2,400க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு, ஏறத்தாழ 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். குறிப்பாக, மின்சார இரயில் சேவை உள்ள புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், மீஞ்சூர், அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளில் பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ள நிலையில், கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.