நீட் தேர்வு: தமிழகத்தில் ஒரேநாளில் 3-வது தற்கொலை
திருச்செங்கோட்டில் நீட் தேர்வுக்கு தயாரான நிலையில் தேர்வில் தேர்ச்சிக்கு பயந்து மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


நாமக்கல்: திருச்செங்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் மின்சார உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மோதிலால் (21), பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற போதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்ற நிலையில் தேர்ச்சி பெற முடியாத சூழல் உருவானது. தற்போது மூன்றாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தேர்வை எழுதயிருந்தார்.
இதற்கிடையில் தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற மன அழுத்தத்திலேயே அவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகியோர் தற்கொலை செய்த நிலையில், சனிக்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் மாணவர் மோதிலாலும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரேநாளில் நிகழும் 3-வது தற்கொலை இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...