சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் தூரல் மழை பெய்து வந்த நிலையில், இன்று மாலை அநேக இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் தூரல் மழை பெய்து வந்த நிலையில், இன்று மாலை அநேக இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆந்தித்தை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை கனமழை பெய்தது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், ஒருசில இடங்களில் தூரல் மழையும் பெய்து வந்த நிலையில் மாலையில் கனமழை பெய்தது.
சென்னை சென்ட்ரல், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை, மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மணலி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...