கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதியின் பெயர் சூட்டக் கோரிய வழக்கு தள்ளுபடி

தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டுவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

News image

உயர்நீதிமன்றம்.

Updated On :14 செப்டம்பர் 2020, 7:44 am

DIN

தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டுவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் பி.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் கடந்த ஆகஸ்ட் 1- ஆம் தேதி சென்னையில் உள்ள ஆலந்தூர், சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் சூட்டினார். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு 'அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம்' எனவும், சென்ட்ரல்  மெட்ரோ ரயில் நிலையத்துக்கு 'புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மெட்ரோ ரயில் நிலையம்'  எனவும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு 'புரட்சி தலைவி டாக்டர். ஜெயலலிதா மெட்ரோ ரயில் நிலையம்' எனவும்  பெயர் சூட்டப்பட்டது. 

ஆனால், அரசியல் காரணத்துக்காக மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முன்னாள்
முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்டவில்லை. ஆனால், மெட்ரோ ரயில்
திட்டத்துக்கு மூளையாக இருந்தவரே கருணாநிதி தான். இந்த திட்டத்தை
சென்னையில் அமல்படுத்துவதற்கு முன், தற்போது  எதிர்கட்சி தலைவராக
இருக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்று, அங்கு மெட்ரோ
ரயில் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் தான் இந்த திட்டம் சென்னையில் அமல்படுத்தப்பட்டது. எனவே, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டுவது குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. அரசு முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.