தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தமிழகத்தில் புதிதாக 5,569 பேருக்கு பாதிப்பு

​தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,569 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :19 செப்டம்பர் 2020, 2:18 pm


தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,569 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,569 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,36,477 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 66 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 8,751 ஆக உயர்ந்துள்ளது.  5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,81,273 பேர் குணமடைந்துள்ளனர். 46,453 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 85,117 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 63,88,583 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அரசு பரிசோதனை ஆய்வகங்கள் 66, தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் 109 என மொத்தம் 175 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.