தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சென்னையில் 10,000-க்கும் கீழ் குறைந்தது கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 9,966 ஆகக் குறைந்துள்ளது. 

News image

சென்னையில் கரோனா பாதிப்பு

Updated On :20 செப்டம்பர் 2020, 8:12 am

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 9,966 ஆகக் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. சென்னையிலும் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 

சென்னையில் இதுவரை 1,54,624 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,046 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,41,612 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 9,966 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும், மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரத்தில், கோடம்பாக்கத்தில் 1,215 பேரும், அண்ணா நகரில் 1,053 பேரும், அம்பத்தூரில் 768 பேரும், அடையாறில் 865 பேரும், வளசரவாக்கத்தில் 684 பேரும், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.