சிதம்பரம் அருகே மக்கள் எதிர்ப்பை மீறி சாயக்கழிவு ஆலையா? ராமதாஸ் கண்டனம் 

சிதம்பரம் அருகே மக்கள் எதிர்ப்பை மீறி சாயக்கழிவு ஆலையை அமைக்க அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சிதம்பரம் அருகே மக்கள் எதிர்ப்பை மீறி சாயக்கழிவு ஆலையை அமைக்க அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான பணிகளை, பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி முழு வீச்சில் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களின் உணர்வுகளை மதிக்காமல், காவிரி பாசனப்பகுதியை கழிவுநீர் தொட்டியாக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது. 

பெரியப்பட்டு சாயக்கழிவு ஆலை அமைக்கப்பட்டால், காவிரி டெல்டாவின் கடைசி எல்லையாக முப்போகம் விளையும் பூமியாக திகழும் பெரியப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பாலைவனமாக மாறக்கூடும். இதனால் பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகளும், வனப்பகுதிகளும் அழியும் ஆபத்து உள்ளது. கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள இராசயன ஆலைகளால் அப்பகுதி நச்சு பூமியாக மாறி வரும் நிலையில், அவற்றுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது தான் கடலூர் மாவட்ட மக்களின் விருப்பம் ஆகும். 

அதை நிறைவேற்றுவதற்கு பதிலாக, கூடுதல் கேடு விளைவிக்கும் சாயக்கழிவு ஆலையை அமைக்க அனுமதிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடலூர் மாவட்ட மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com