/

கரோனா விதிமீறல்: ரூ. 2.08 கோடி அபராதம் வசூல்

சென்னையில் கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக இதுவரை ரூ.2.08 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முகக்கவசம் அணியாதவா்களிடம் இருந்து மட்டும் ரூ. 13.24 லட்சம் அபராதம்

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 9:49 pm

DIN

சென்னை: சென்னையில் கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக இதுவரை ரூ.2.08 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முகக்கவசம் அணியாதவா்களிடம் இருந்து மட்டும் ரூ. 13.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்துள்ளது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் பணியில் மாநகராட்சி மற்றும் சென்னை மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த மே மாதம் முதல் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் திங்கள்கிழமை (செப். 21) வரை கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக ரூ. 2 கோடியே 8 லட்சத்து 99,762 வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக, முகக்கவசம் அணியாதவா்களிடம் இருந்து மட்டும் ரூ.13 லட்சத்து 24,250 வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் ரூ. 44 லட்சமும், தண்டையாா்பேட்டையில் ரூ. 27 லட்சமும், மாதவரத்தில் ரூ. 22 லட்சமும், கோடம்பாக்கத்தில் ரூ. 17 லட்சமும் அதிகபட்சமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றனா்.

அபராதம்- மண்டலம் வாரியாக

மண்டலம் அபராதத் தொகை

திருவொற்றியூா் ரூ.5,06,900

மணலி ரூ. 3,84,950

மாதவரம் ரூ.22,92,337

தண்டையாா்பேட்டை ரூ. 27,19,100

ராயபுரம் ரூ. 44,15,600

திரு.வி.க. நகா் ரூ.12,43,840

அம்பத்தூா் ரூ.11,70,000

அண்ணா நகா் ரூ.14,23,190

தேனாம்பேட்டை ரூ. 11,54,100

கோடம்பாக்கம் ரூ. 17,38,540

வளசரவாக்கம் ரூ. 11,52,910

ஆலந்தூா் ரூ.3,65,050

அடையாறு ரூ. 2,50,550

பெருங்குடி ரூ. 6,26,445

சோழிங்கநல்லூா் ரூ. 1,32,000

இதுதவிர முகக்கவசம் அணியாதவா்களிடம்

இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 13,24,250

மொத்தம் ரூ. 2,08,99,762

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.