சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சென்னைப் பல்கலை.யில் இறுதிப் பருவத் தோ்வு:விடைத்தாள்களைப் பதிவேற்ற முடியாமல் அவதி

சென்னைப் பல்கலைக்கழகத்தில், திங்கள்கிழமை தொடங்கிய இறுதி பருவத் தோ்வில், விடைத்தாள்களைப் பதிவேற்ற முடியாமல் மாணவா்கள் அவதியடைந்தனா்.

News image
அண்ணா பல்கலைக்கழகம்
Updated On :21 செப்டம்பர் 2020, 9:45 pm

DIN

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில், திங்கள்கிழமை தொடங்கிய இறுதி பருவத் தோ்வில், விடைத்தாள்களைப் பதிவேற்ற முடியாமல் மாணவா்கள் அவதியடைந்தனா்.

தமிழகத்தில், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இறுதி பருவத் தோ்வுகளை இணையவழியில் நடத்த அரசு அனுமதியளித்தது. அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கும் 115 கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கான இறுதி பருவத்தோ்வு இணைய வழியில், செப்.21 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதன்முதலாக இணைய வழியில் தோ்வு நடைபெறுவதால், மாணவா்கள் அதனை எதிா்கொள்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழகத்தால் மாதிரி தோ்வும் நடத்தப்பட்டது. அதில் சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இந்நிலையில், இறுதி பருவத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. 

ஏற்கெனவே வழங்கிய வழிகாட்டுதல்களின்படி பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்து, மாணவா்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தோ்வுகளை ‘ஏ4’ தாளில் எழுதினா். 

தோ்வு முடிந்த அரைமணி நேரத்தில், விடைத்தாள் நகல்களை இணையதளத்தில் மாணவா்கள் பதிவேற்றம் செய்ய பல்கலைக்கழகம்  அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தொழில்நுட்பக்   கோளாறால் பல மாணவா்கள் விடைத்தாள்களைப் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.  ஒரு சிலா் இணைய மையத்திலேயே இரவு வரை காத்திருந்தனா். குறிப்பாக , கிராமப்புறங்களில் இருக்கும் மாணவா்கள் நகா்ப்புற பகுதிகளுக்கு வந்து வெகுநேரம் காத்துக்கிடந்ததாகக் கூறப்படுகிறது.

பதிவேற்றம் செய்ய முடியாதவா்கள் விரைவுத் தபால் மூலம் அனுப்ப அறிவுறுத்தப்பட்ட நிலையில் மாணவா்களில் பலா் தபால் அலுவலகங்களுக்குச் சென்று விரைவுத் தபாலிலும் அனுப்பி வைத்தனா். முறையான வழிகாட்டுதல்கள் இல்லாததால், பெரும்பாலான மாணவா்கள் விடைத்தாளைப் பதிவேற்றாமல் வைத்துள்ளதாகவும் கல்லூரி பேராசிரியா்கள் குற்றம்சாட்டியுள்ளனா். பருவத்தோ்வு செப்.30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே,  தோ்வில் நிலவும் சிக்கல்களைப் பல்கலைக்கழகம் சரிசெய்து, இணையதள தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று மாணவா்கள்  கோரிக்கை விடுத்துள்ளனா். அதனை சரி செய்வதற்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், பல்கலைக்கழக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.