விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மானாமதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு செவ்வாய்கிழமை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். 

News image
மானாமதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு
Updated On :22 செப்டம்பர் 2020, 7:55 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு செவ்வாய்கிழமை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை பணியை ஆய்வு செய்யவும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் முதல்வர் பழனிசாமி மதுரையிலிருந்து கார் மூலம் ராமநாதபுரம் சென்றார்.

வழியில் மானாமதுரை பேருந்து நிலையம் முன்பு அதிமுகவினர் திரண்டு நின்று மேளதாளம் முழங்க அவருக்கு வரவேற்பளித்தனர். தமிழக காதி கிராமத் தொழில்கள்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையிலும் மானாமதுரை எம்.எல்.ஏ  நெட்டூர் எஸ்.நாகராஜன் முன்னிலையிலும் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுகவினர் திரண்டு நின்று முதல்வரை வரவேற்றனர். 

பெண்கள் பழனிசாமி வந்த காரின் மீது  பூக்களைத் தூவி வரவேற்பு கொடுத்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறப்பினர் எம்.குணசேகரன், அதிமுக மானாமதுரை ஒன்றியச் செயலாளர்கள் ஜெயபிரகாஷ், சிவ சிவ ஸ்ரீதரன்,  நகர்ச் செயலாளர் விஜி.போஸ்,தகவல் தொழில்நுட்ப அணி நெட்டூர் எஸ்.கே.பாலா,  கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகிகள் கே.முனியசாமி, சின்னை மாரியப்பன், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருப்புவனத்திலும் அதிமுகவினர் ஏராளமானோர் முதல்வர் பழனிசாமிக்கு வரவேற்பளித்தனர்,
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.