ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

புதுச்சேரியில் கரோனா உயிரிழப்பு 500 ஆக உயர்ந்தது

புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. 

News image

புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. 

Updated On :26 செப்டம்பர் 2020, 7:18 am

 
புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் சனிக்கிழமை 5,032 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் 439 பேரும், காரைக்காலில் 61 பேரும், ஏனாமில் 21 பேரும், மாஹேவில் 14 பேரும் என மொத்தம்  555 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,032 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 1,875 பேர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 3 ,452 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500 (1.92சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 20,205 (77.62சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.