தமிழகத்தில் புதிதாக 96 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
'தமிழகத்தில் இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 59,911. மேலும், 293 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 32,896. இதுவரை 7,267 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 738 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்றைக்கு புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 84. மீதியுள்ள 12 பேரில் 3 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். எஞ்சிய 12 பேரும் கரோனா பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள். இதில் ஒருவர் மருத்துவர்.
எனவே, தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.
தில்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்களில் 763 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 554 பேர் நேரடியாகவும், 188 பேர் அவர்கள் மூலமாகவும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


