தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
கரோனா பரவல் எதிரொலியாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நோயின் தாக்கத்தைப் பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார். தொடர்ந்து, இன்று காலை 19 மருத்துவ நிபுணர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், நாளை காலை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


