கரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு வன்முறையில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அருகிலுள்ள வேலங்காடு இடுகாட்டில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு மருத்துவரின் அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோன்று அரசு ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றியை முகேஷ் சௌதரிக்குச் சமர்ப்பித்த கேப்டன் ருதுராஜ்!

மூன்றாவது நாளாகக் குறைந்த தங்கம் விலை: வெள்ளி?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் தொடக்கம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


