தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சென்னையில் அம்பத்தூருக்கும் பரவியது கரோனா தொற்று: ஒருவருக்கு பாதிப்பு

சென்னையில் இதுவரை  கரோனா தொற்று இல்லாமல் இருந்த அம்பத்தூர் மண்டலத்திலும் ஒருவருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2020, 5:04 am

சென்னை: சென்னையில் இதுவரை  கரோனா தொற்று இல்லாமல் இருந்த அம்பத்தூர் மண்டலத்திலும் ஒருவருக்கு கரோனா தொற்று பரவியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை புதன்கிழமை காலை நிலவரப்படி 358 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் புதிதாக 55 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், இதுவரை கரோனா தொற்று இல்லாத அம்பத்தூர் மண்டலத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவில் கரோனா பாதிப்பு உள்ளது. 

சென்னையில் 358 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ராயபுரம் பகுதியில் அதிகபட்சமாக 116 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கடுத்த இடத்தில் தண்டையார்பேட்டையில் 46 பேருக்கும், திருவிக நகர் மற்றும் தேனாம்பேட்டையில் தலா 42 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை மணலி மண்டலத்தில் மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை.. மண்டல வாரியாக..
திருவொற்றியூர் - 12
மணலி - 0
மாதவரம்- 3 
தண்ட்டையார்பேட்டை - 46
ராயபுரம் - 116
திருவிக நகர் - 42
அம்பத்தூர் -  1
அண்ணா நகர் - 27
தேனாம்பேட்டை - 42
கோடம்பாக்கம் - 35
வளசரவாக்கம் - 9
ஆலந்தூர் - 7
அடையார் - 7
பெருங்குடி - 8
சோழிங்கநல்லூர் - 2
மற்றவர்கள் - 1

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.