சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 33 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,629 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் நேற்று 15 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் பாதிப்பு 373 ஆக அதிகரித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் மண்டலவாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் ராயபுரம் பகுதியில் அதிகபட்சமாக 117 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தண்டையார் பேட்டையில் 46 பேருக்கும், திரு.வி.க. நகரில் 45 பேருக்கும், தேனாம்பேட்டையில் 44 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு விவரம்:
திருவொற்றியூர் - 13
மணலி - 1
மாதவரம்- 3
தண்டையார்பேட்டை - 46
ராயபுரம் - 117
திருவிக நகர் - 45
அம்பத்தூர் - 1
அண்ணா நகர் - 32
தேனாம்பேட்டை - 44
கோடம்பாக்கம் - 36
வளசரவாக்கம் - 10
ஆலந்தூர் - 7
அடையார் - 7
பெருங்குடி -8
சோழிங்கநல்லூர் - 2
மற்றவர்கள் - 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!
வாக்கு சதவீதம்! தென் மாவட்டங்களில் குறைவு; கொங்கு மண்டலங்களில் அதிகம்!

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


