தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,755 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2020, 1:07 pm


தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,683 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 114. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 886. இன்று இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 72,403 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 6,426 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 65,834 நபர்களுக்கும் இன்று மட்டும் 5,882 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இன்றைக்கு பரிசோதனை மேற்கொண்ட 5,882 பேரில் புதிதாக 72 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,755 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 25,503. மேலும், 19 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 87,159. தமிழகத்தில் 23 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்கள் என 34 ஆய்வகங்கள் உள்ளன.

தமிழகத்தில் பாதிப்பு: 1,755

உயிரிழந்தோர் எண்ணிக்கை: 22

குணமடைந்தோர் எண்ணிக்கை: 866 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.