தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 811 பேருக்கு தொற்று; 80% பேருக்கு அறிகுறிகள் இல்லை

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 811 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 10:35 am

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 811 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை 778 பேருக்கு தொற்று ஏற்பட்டதுதான் அம்மாநிலத்தில் ஒருநாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாக  இருந்தது.

இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 811 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,628 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 323ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80% பேர் கரோனா அறிகுறிகள் இல்லாமலே தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தகவலை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.