அரக்கோணம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜெகத்ரட்சகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவா் குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
திமுக எம்.பி.யான ஜெகத்ரட்சகன் பொது முடக்க காலத்தில் நலத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வந்தாா். இந்நிலையில், அவருக்கும், அவரது மனைவிக்கும் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அவா்கள் இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இருவருக்குமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டனா். ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மனைவியின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: தங்கம், வெள்ளி விலை உயர்வு!

மேட்டூர் அணை நிலவரம்!

தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி புதிய திட்டங்களை இன்று அறிவிப்பார்: ஜி.கே. வாசன்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

