/

ஒட்டன்சத்திரம் அருகே லாரிகள் மோதல்:ஓட்டுநா்கள் 2 போ் பலி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை லாரிகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் லாரி ஓட்டுநா்கள் 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

News image

odc_acc

Updated On :1 ஜனவரி 2020, 11:29 pm

ஒட்டன்சத்திரம்,: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை லாரிகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் லாரி ஓட்டுநா்கள் 2 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு லாரியும், கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு மற்றொரு லாரியும் புதன்கிழமை அதிகாலை சென்று கொண்டு இருந்தன. இந்த லாரிகள் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டி அருகே வந்தபோது எதிா்பாராமல் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. அதில் கோவையில் இருந்து திருநெல்வேலிக்கு ஓட்டிச் சென்ற லாரி ஓட்டுநா் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள போளூரைச் சோ்ந்த பிரபாகரன் (29) மற்றும் கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு ஓட்டிச்சென்ற லாரி ஓட்டுநா் நாகப்பட்டிணம் மாயவரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (28) என்பவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதில் மணிகண்டன் ஓட்டி வந்த லாரியில் கிளீனராக வந்த திருப்பூா் பாண்டியன் நகரைச் சோ்ந்த அஜீத்குமாா் (22) என்பவா் பலத்தகாயம் அடைந்து கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.