கரோனா வைரஸ் பாதிப்புக்கு சித்த மருத்துவம்

சீனாவில் பரவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இல்லை. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. 
கரோனா வைரஸ் பாதிப்புக்கு சித்த மருத்துவம்

சீனாவில் பரவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இல்லை. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை. 

சீனாவை உலுக்கியிருக்கும் கரோனா வைரஸ் நோய்க்கான ஆராய்ச்சிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. 

பொதுவாக சித்த மருத்துவத்தில் வைரஸுக்கும்,   அனைத்து வகையான நோய்களுக்கும் நிலவேம்புக் குடிநீர், சீந்தில் குடிநீர், நெல்லிக்காய் சாறு உள்ளிட்டவை சிறந்த மருந்துகளாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதில் சிறந்தது. இவற்றை எடுத்துக்கொண்டாலே வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என்கிறார் திருநெல்வேலி சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை விரிவுரையாளர் சுபாஷ்சந்திரன். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியது: சுவாசப் பிரச்னைகள், ஜலதோஷம், மூக்கு  ஒழுகுதல் இவைகள் வைரஸ் காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள். பொதுவாகவே வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம். இருமல் வரும்போதும், தும்மலின்போதும் கைக்குட்டைகளைக் கொண்டு வாய் மற்றும் மூக்குப் பகுதிகளை மூடிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

வைரஸ் காய்ச்சல் என்பது பொதுவாக குழந்தைகள், நீரழிவு நோயாளிகள், காச நோயாளிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகமாக தாக்கும். எனவே இவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. குறிப்பாக வைரஸ் தொற்று பரவலின் போது அதிக பயணங்களை தவிர்ப்பது நல்லது. சித்த மருத்துவத்தில் வேப்பங்கொழுந்து சாற்றை தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குடற்புழுக்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். வாதம், பித்தம், கபம் போன்ற மூன்று வகையான உடம்புகள் உள்ளன. இதில் வாத உடம்பு உள்ளவர்கள் புளிப்பு சுவையை குறைவாக உண்ணவேண்டும். இது போன்று ஒவ்வொரு வகை உடல்வாகு உள்ளவர்கள் அவர்களுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நலம் பயக்கும். நான் ஏற்கனவே கூறியது போல்,  வைரஸ் காய்ச்சல் இருப்பதை அறிந்த உடனே நாம் அருகில் உள்ள அரசு சித்த மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற  வேண்டும். அவரின் ஆலோசனைப்படி எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் பொருள்களை உட்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com